இந்தி வெறி வேண்டாம்.. தமிழர்கள் சூடு தாங்கமாட்டீங்க!! பாஜகவுக்கு ஸ்டாலின் கடும் வார்னிங்!! 

CM Stalin warning BJP Hindi imposition Tamil names 2026

மத்திய பாஜக அரசு திட்டங்களுக்கு இந்தி பெயர்களைச் சூட்டுவதோடு, அதைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அப்படியே எழுதி வைப்பதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு முயற்சியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக அவர் சாடியுள்ளார்.

“தமிழ் பெயர்களை வையுங்கள்”: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்தி பெயர்களே சூட்டப்பட்டு வருகின்றன. இது குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மத்திய அரசு திட்டங்களுக்குச் சரியான தமிழ் பெயர்கள் இடம்பெற வேண்டும். இந்தி பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அப்படியே எழுதி வைப்பது இழிவான செயல். இது தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

“பாஜக அரசுக்கு எச்சரிக்கை”: இந்தி திணிப்பு வெறியில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், “இந்தி திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்கிறது. தமிழர்களின் போராட்டத்தையும், அவர்களின் சூட்டையும் பாஜக அரசு உணர வேண்டி இருக்கும்” என மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மொழிப் போர் குறித்த உணர்வுகள் தமிழகத்தில் இன்னும் மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2026 தேர்தல் களம் சூடுபிடிக்குமா? ஏற்கனவே விஜய் போன்ற புதிய வரவுகள் மொழிக் கொள்கை பற்றிப் பேசி வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் இந்தி திணிப்பு விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மொழி உரிமையைக் காக்கத் திமுக அரசு எப்போதும் முன்னிற்கும் என்பதை இதன் மூலம் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram