கொக்கைன் விற்ற கெவினின் வாக்குமூலம்!! விசாரணையை சூடு படுத்தியுள்ளது!!

கொக்கைன் விற்ற கெவினின் வாக்குமூலம்!! விசாரணையை சூடு படுத்தியுள்ளது!

கடந்த மாதம் பாரில் போதை காரணமாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரின் செயலில் வித்தியாசத்தை கண்ட போலீசார் அவரை விசாரிக்கையில் கொக்கைன் பயன்பாடு உள்ளது தெரிய வந்திருந்தது. அவர் வழங்கிய வாக்குமூலம் அடிப்படையில் ஒரு பெரிய நெட்வொர்க்கே கைது செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சிலர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு நாட்களாக சப்ளை செய்து வந்த பிரதீப் பிரசாந்த் கெவின் ஜான் ஆகியோரை போதை தடுப்பு பிரிவு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

அதில் கெவின் கூறிய வாக்கு மூலம் பின்வருமாறு, தேவைப்படுகின்ற போதை பொருளை ஒரு வாரத்திற்கு முன்னாலே பிரதீப்பிடம் தெரிவிக்க வேண்டும். அவர் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் மூலம் சப்ளை செய்வார். அதை என்னிடம் இருந்து ஒரு கிராம் ஏழாயிரத்திற்கு வாங்கி பிரஷாத் நடிகர்களுக்கு 15,000 என்று விற்று விடுவார். மேலும் நடிகர்கள் மூலம் இது பெரும் மார்க்கெட் செய்யப்பட்டிருந்தது. ஜானின் நம்பகத்தக்க கையாளாக பிரதிப் செயல்பட்டு இருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோர் போட்ட ஜாமீன் வழக்குகள் நீதிபதி தரப்பில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் யார் யாருக்கு சப்ளை செய்யப்பட்டிருந்தது என்ற விவரமும் கலெக்ட் செய்யப்பட்டு வருகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram