போதைப்பொருள் நிர்வாகி பிரசாத் ஸ்டேட்மென்ட்!! ஹீரோ, ஹீரோயின்ஸ்க்கு கொக்கைன் பார்ட்டி!!

சமீபத்தில் நுங்கம்பாக்கம் பப்பில் போதை காரணமாக, பிரச்சனையில் ஈடுபட்டு கொலை செய்ய முற்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் அதிமுகவில் தென் சென்னை கிழக்கு தொழில்நுட்ப அணியில் துணை செயலாளராக இருந்து வந்தார். இவரை கைது செய்த போலீசார் இவருடைய மொபைலை ஆராய்ந்த போது, பல திடுக்கிடும் விஷயங்களை கண்டறிந்தனர். அவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும், அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பண மோசடி ஈடுபட்டவர்களுடனும், ஆள் கடத்தல் கும்பலுடனும் காண்டாக்ட் வைத்து வந்துள்ளார். அதனை அடுத்து அவருடைய விசாரணை தீவிரப்படுத்திய நிலையில், அவர் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். இவருக்கு தொடர்ந்து சப்ளை செய்து வந்த பெங்களூருவை சேர்ந்த நைஜீரியா நாட்டு குடிமகன் தலைமறைவாகி உள்ளார்.

இவர் படம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தவர். அதற்கு அதிமுகவில் உள்ள மற்றொருவரும் பெரும் உதவி செய்துள்ளார். அப்படி ஹீரோ, ஹீரோயின்களுடன் இணைந்து இரவு நேர பார்ட்டி ஏற்பாடு செய்து அதன் மூலம் கொக்கைனை சப்ளை செய்து வந்துள்ளார். ஹீரோ ஹீரோயின் போதை ஆன பின்னர் அவர்களை ரகசியமாக மிரட்டி அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்து வந்துள்ளார். இவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் ரெகுலராக வாங்கி அதன் மூலம் அவர் இன்னொரு நடிகைக்கு சப்ளை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் கிருஷ்ணா கொக்கைன் பயன்படுத்தியதாக தகவல் கிடைத்த நிலையில், அவரை விசாரிக்க சம்மன் அனுப்பியுள்ளனர் போலீசார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram