கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே உதவித் தொகையாக ரூபாய் 50,000 பெறலாம். அது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். நலிவுற்ற நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட படிப்பில் தன்னை இணைத்து இருந்தால் இந்த உதவித் தொகையை அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை பெறலாம். தொழிற்கல்வியில் பொறியியல் பிரிவு, பல் மருத்துவம், மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றிற்கு படிக்கும் மாணவர்கள் இதற்கு அப்ளை செய்யலாம். இதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி தொகை பெற கோட்டோ அடிப்படையில் அவர்கள் கல்லூரியில் இடம் பெற்றிருத்தல் கூடாது. ஒற்றைச் சாளர அடிப்படையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ராணுவ வீரர்கள் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், விவசாயி குடும்ப மாணவர்களுக்கும் இது செல்லுபடி ஆகாது. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு குறைவாக இருக்க வேண்டும். இதில் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
இதற்கு தகுதி உடைய மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மார்க் சீட், குடியிருப்பு சான்று, வருமானச் சான்று, பிறப்பிடம் தமிழ்நாடு என்கின்ற சான்று, கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை குறித்த நகல் மேலும் குடும்ப உறுப்பினர்களின் வயது, படிப்பு வருமானம் ஆகிய சான்றுகளையும் இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். உரிய அதிகாரிகளால் ஆவணங்கள் சரிபார்த்தப் பின், கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே ரூபாய் 50 ஆயிரம் உதவி தொகை தகுதியுடைய மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.