தெறிக்கவிடும் தளபதியின் விருது வழங்கும் விழா!! பின்னணியில் அரசியல் தந்திரம் !!

Award ceremony!! Political trickery behind the scenes!!

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்க உள்ளார். அதில் 10 மற்றும்  12 ஆம் வகுப்புகள் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு விருதுகள்  மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார் விஜய்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விருது விழாவானது நடைபெறுகிறது. இதில் 600 மாணவ, மாணவியர்கள் பங்கு பெற உள்ளனர். மாணவர்களின் பெற்றோர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.மாணவர்களை நேரில் அல்லது பாராட்டினார். நீட் படிப்பு மட்டும் அல்ல, வெளியில் இன்னும் எவ்வளவோ படிப்புகள் உள்ளது என்றும், ஓட்டுக்கு ஒரு போதும் காசோ அல்லது பொருளோ வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை பல மாவட்டங்களில் இருந்து அழைப்பு விடுத்த நிலையில் இன்று விருது விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்.

தவெக தலைவர் அரங்கில் நுழைந்ததும் முதலில் மாற்றுத்திறனாளி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்கள் மத்தியில் அமர்ந்தார். பின் அவர்கள் நலம் குறித்து விசாரித்தார். விருது வழங்கும் விழாவானது இந்த ஆண்டு மூன்று கட்டமாக நடைபெற உள்ளது.

அதன் முதற்கட்டமாக  இன்று ( மே 30), இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் நான்காம் தேதி மற்றும் மூன்றாம் கட்டமாக 13ம் தேதி என நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்களை கவர்ந்து அவர்கள் மூலம் ஓட்டுகளை பெறவிருக்கிறார் விஜய் என  மீடியா பக்கங்களில் பலரும்   விமர்சித்து வருகின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram