ஆண்டுதோறும் ஊட்டியில் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படும் . அதன் பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127ஆம் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். பின் மலர் கண்காட்சியை குடும்பத்துடன் கண்டு களித்தார். இன்று முதல் 25ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கோடை காலம் வந்தாலே மக்கள் ஊட்டி , கொடைக்கானல் இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். மக்களை கவரும் வண்ணம் காலநிலை , இயற்கை வளங்கள் உள்ள இடங்கள் மிகவும் ரசிக்கின்றனர். கோடையில் காலத்தில் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் , வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக வருடம் வருடம் மே மாதம் தொடங்க போகிறது .இன்று முதல் பதினோரு நாட்கள் நடக்கிறது.
இந்த ஆண்டில் மலர் கண்காட்சியில் சிறப்பாக ஜெர்மனியம் , சைக்ளோபின் ,பால்சம் , ஆர்னமெண்ட்டாள்கேல் , ஓரியன்டல் , லில்லி , பேன்சி மேரிகோல்ட் உட்பட 275 வகை விதைகள், பல நாடுகளில் இருந்து பெறப்பட்டு மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது. பூங்காவில் பல இடங்களில் 7 1/2 லட்சம் நாற்று நட்டனர். அதைப்போல் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. பாரம்பரியமான ராஜராஜ சோழனின் அரண்மனை போன்ற வடிவத்தில் ,2 லட்சம் கார்னேசன் உட்பட வெவ்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது .
பிறகு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை போன்ற தோற்றத்தில் 65 ஆயிரம் பூக்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு லட்ச மலர்களை வைத்து செஸ் , யானை என அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்ணாடி மாளிகை , கள்ளிச்செடி மாளிகை புதிதாக புதுப்பிக்கப்பட்டு, அரிய வகை செடிகள் மற்றும் மலர்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை நிறைய பூந்தொட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமான தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் , தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை காண்பதற்கு பலர் வருவார்கள் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை காண்பதற்காக ஏராளமான கூட்டம் இருக்கும் என்பதால் ,200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.