சென்னை: சென்னைஅண்ணா நகர் அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்த ஏ கேட்டகிரி ரவுடியான ராபர்ட் என்பவர் சஞ்சனா என்ற திருநங்கையுடன் தனது வீட்டிற்கு பக்கத்து தெருவில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். சஞ்சனா வெளியே சென்ற நேரத்தில் தனது வீட்டிற்கு சென்று தந்தை எட்வின் இடம் சுடுதண்ணீர் வைக்குமாறு கூறிவிட்டு ராபர்ட் சாலையில் நடந்து சென்றுள்ளார் அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த ஆறு நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
ராபர்ட் சத்தம் கேட்டு ராபர்ட் இன் தந்தை அங்கு சென்றபோது தனது மகனை அந்த கும்பல் வெறி தீர வெட்டி சாய்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை தடுக்கச் சென்ற போது அந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராபத்தை கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ராபர்ட் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ராபர்ட் உயிருக்கு போராடி துடிதுடித்த நிலையில் உறவினர்கள் தூக்கச் சென்ற போது போலீசார் தூக்க விடவில்லை. ராபாட் இறந்ததற்கு போலீசாரும் ஒரு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது முதற்கட்ட தகவலாக கொலை செய்தது ரவுடி அயனாவரம் லோகுவின் கூட்டாளிகள் என்பதும் ராபர்ட் கொலை செய்வதற்கு முன்பு அந்த கும்பல் வீடு புகுந்து ஒரு பெண்ணின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
ராபர்ட்டுக்கும் லோகுவிற்கும் கஞ்சா மட்டும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 வருடங்களாக பகை இருந்து வந்துள்ளது மேலும் லோகுவின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஹரிஷ் என்பவரின் வீடு மற்றும் ஆட்டோ ஆகியவற்றை அயனாவரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் எரித்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த லோகோ, இதையெல்லாம் அறிந்து கொண்டு தங்களது விரோதிகளை எல்லாம் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என அரிவாளோடு கும்பலாக புறப்பட்டுள்ளனர்.
அந்த கும்பல் அயனாவரத்தைச் சேர்ந்த சிறுவன் வீட்டிற்கு சென்ற போது சிறுவன் து வீட்டில் இல்லாததால் அவரது தாயார் ரேவதியின் தலையில் அரிவாளால் தாக்கி விட்டு ராபட்டை கொலை செய்யப்பட பட்டுள்ளன. இரண்டு கொடூர சம்பவங்களை ஆராய்ந்து ரவுடி லோகுவின் கூட்டாளிகளை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வரும் நிலைகள் இன்ஸ்டால் போட்டாவுடன் போஸ்ட் போட்டு கொண்டாடியது தெரியவந்துள்ளது.





