Cricket : இந்திய அணி அடுத்து விளையாட உள்ள கடைசி லீக் போட்டியான நியூசிலாந்து உடனான போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கடைசி லீக் போட்டி நியூசிலாந்து அடிவுடன் நானு போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்திய அணி குரூப் ஏ வில் இடம் பெற்று விளையாடி முடித்த இரண்டு போட்டிகளிலும், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணி உடனான இரு போட்டிகளில் அபார வெற்றியை அடைந்து நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் வாய்ப்பு இருந்து வெளியேறின.
இந்நிலையில் இந்திய அணியில் சில குழப்பங்கள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி உடனான போட்டியிலேயே ரோகித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டு அவ்வப்போது வெளியேறி விளையாடி வந்தார். அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணி உடனான போட்டிக்கு இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கான எந்த ஒரு அதிகார அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் வலைப்பேச்சு ஈடுபட்டு தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அடுத்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் ரிஷப் பண்ட் அணியில் வருவார் என கூறப்பட்டது. ஒருவேளை ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றால் அவர் எந்த வரிசையில் களமிறங்குவார் யார் எந்த வரிசைக்கு மாற்றப்படும் என குழப்பம் வெளிவரும் நிலையில், ரிஷப் பண்ட் ஐந்தாம் வரிசையில் களமிறங்குவார்.
ஐந்தாம் வரிசையில் களமிறங்கும் அக்சர் பட்டேல் ஆறாவது வரிசையில் களமிறங்குவார் எனவும், தற்போது ஆறாவது வரிசையில் களமிறங்கி வரும் கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது முதன்மை கீப்பராக விளையாடுவது கே எல் ராகுல். அதனால் ரிஷப் பண் களம் இறங்கினாலும் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே களமிறங்குவார் என கூறப்படுகிறது.