பிளாஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்தக்கூடாததற்கான முக்கிய காரணங்கள்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு :
பிளாஸ்டிக் நழுவும் அல்லது குப்பையாக வீசப்படும் போது இயற்கையில் கரையாமல் நீண்ட காலம் நிலைத்து நிற்கிறது. இதனால் மண்ணையும், நீரையும் மாசுபடுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் குறைய வாய்ப்புள்ளது.
மிருகங்களுக்குப் பாதிப்பு தருகிறது: கடல் மற்றும் நில வாழ் விலங்குகள் பிளாஸ்டிக்கைக் உணவாகக் குழப்பி நுகர்கின்றன. இவ்வாறு உண்ணுவதால் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தாகிறது.
மீளச்சுழற்சி சிரமம்: பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை மீளச்சுழற்சி செய்ய முடியாது. மீளச்சுழற்சி செய்தாலும், அந்த பிளாஸ்டிக் தரம் குறைவாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு:
சில பிளாஸ்டிக் வகைகள் உடலுக்கு நச்சு விளைவுகளை ஏற்படுத்தும். உணவுடன் தொடர்பு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானவை.
பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் போது காற்று மாசுபடும். இது வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு காரணமாகிறது. நம் தினம்தோறும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பல்வேறு வகையான பாதிப்புகளை விளைவிக்கிறது. உங்களால் முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையான நலமான வளமான வாழ்க்கையை வாழ சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமையாகும்