கடந்த அக்டோபர் மாதம் முதல் கூட்டுறவு வங்கிகள் நகை கடன்களை புதுப்பிக்க புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இப் புதிய விதிமுறைகளின் படி 12 மாத கால அவகாசத்திற்குள் கடனாளிகள் முழு கடன் தொகையையும் வட்டி உட்பட அனைத்தையும் செலுத்தி அதன் பிறகு மட்டுமே கடனை மீட்டு மீண்டும் நகையை அதன் மறுநாள் புதுப்பிக்க வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியன் ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றமானது சில வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர்கள் கடனை மீண்டும் புதுப்பிக்க தேவையான தொகையை ஏற்படுத்துவதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிலும் பல பயனாளிகள் தங்களுடைய நகைகள் சர்வதேச வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள தங்களுடைய நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வந்த நிலையில் மீண்டும் கூட்டுறவு வங்கிகள் தங்களுடைய விதிகளை புதுப்பித்து இருப்பது பயனாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படக்கூடிய நகை கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வங்கிகளுக்கிடையே வேறுபடுகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி நகை கடன்கள் மற்றும் அதன் பல்வேறு திட்டங்களின் கீழ் மாறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, 2 லட்சம் ரூபாய் நகை கடன் பெற்றிருக்கக் கூடியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வட்டி செலுத்தலாம் என்றும் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நகை கடனுக்கான கடன் தொகை வழங்கப்படும் என்றும் அவ்வாறு வழங்கப்படக் கூடிய தொகைக்கு ஒவ்வொரு மாதமும் அதற்கான வட்டியை செலுத்த வேண்டும் என கூட்டுறவு வங்கிகள் தங்களுடைய புதிய விதிகளில் தெரிவித்திருக்கின்றன.