இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா தொற்று வீரியம், சற்று அதிகமாக உள்ளது. நேற்றைய தினம் மட்டுமே புதியதாக 358 பேருக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுள் 624 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே தற்சமயம் நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6491.
கூட்டம் நிறைந்த இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று ஒரு தினம் மட்டுமே 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சில நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளங்கள் தென்பட்டு உள்ளன. இதன் வீரியம் குறித்த ஆராய்ச்சிகள் பொது சுகாதாரத் துறையால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையாளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது பரவாமல் இருக்க பல யூகங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன.