கொரோனா பெரும் உருவெடுத்து லாக் டவுன் ஆனது நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. சமீபகாலமாக மீண்டும் கொரோனா கணிசமாக பரவிக்கொண்டே வருகின்றது. இந்தியாவின் நிலவரப்படி, ஜூன் 5 நேற்று மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்புகள் அதிகமாக இல்லை என்றாலும் இதுவரை சமீபத்தில் நான்கு பேர் இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், இதன் உத்வேகம் குறித்தும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் மொத்தமாக 5000க்கும் மேல் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை கண்டறியப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி துல்லியமாக 5364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நேற்றைய பொழுது மட்டும் தமிழகத்தில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மருத்துவமனையில் மட்டுமே 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டும் அல்லாது வீட்டிலேயே தனிமைப்படுத்த பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே கூட்டம் நிறைந்த பொதுவெளியில் செல்லும்போது மக்கள் முடிந்த அளவு மாஸ்க் அணிந்து செல்லுமாறும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.