கர்நாடகாவில் ஹாசன் என்கின்ற மாவட்டத்தில் சமீபமாக இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பு காரணமாக தொடர்ந்து இறந்து வருகின்றனர். அதிலும் 30 + வயதினர் அதிகபட்சமாக உள்ளனர். இதனால் அது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தொடரும் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கும் என்று குற்றம் சாட்டி இருந்தார். இதனால் பிற மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயந்து வந்திருந்தனர். இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது குறித்து விளக்கியுள்ளது.
அதில் குறிப்பிட்டதாவது, கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. இறந்தவர்களின் சில உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து பார்த்தால் அவர்களுடைய மரபணு மற்றும் உணவு பழக்க முறை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர்கள் இருந்துள்ளதாக மருத்துவ ப்ரூப் உள்ளது. கொரோனா தடுப்பூசி காரணம் என்று ஒரு முறை கூட அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது மற்றும் நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுவது. அதற்கும் உயிரிழப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.