கிருஷ்ணகுமார் மற்றும் சங்கீதா என்ற தம்பதி கேரளாவில் இருக்கக்கூடிய வடக்கம்சேரி பகுதி சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் பணியின் காரணமாக கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய சூலூருக்கு பக்கத்தில் பட்டணம் புதூர் என்கிற ஊரில் வசித்து வந்தார்கள். மனைவி சங்கீதா ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கணவன் கிருஷ்ணகுமார் மலேசியாவில் இருக்கக்கூடிய ஒரு தனியார் டிராவல் ஏஜென்சி வேலை பார்த்து வந்து தற்போது வேலையை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் கோயம்புத்தூருக்கு திரும்பி உள்ளார்.
மேலும் மனைவியுடன் அவ்வப்போது அடிக்கடி சண்டை வந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து அவர் கேரளாவை சேர்ந்த வழக்கஞ்சேரிக்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளார். இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், கோயம்புத்தூரில் மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளும் தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன் கிருஷ்ணகுமார் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின்பு வீட்டிற்கு வந்துள்ளார் வந்து சிறிது நேரம் கழித்து அவர் திரும்பிச் சென்றுள்ளார் அதன் பின் வீட்டில் எந்த ஒரு சத்தமும் இல்லாத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது மனைவி சுட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் கணவருக்கு தகவல் தெரிக்க தெரிவிக்க முற்பட்டபோது கேரளாவில் கணவரும் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்தது தமிழக போலீஸ் மற்றும் கேரள போலீஸ் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்குக் காரணம் சங்கீதாவின் மீது கிருஷ்ண குமாருக்கு உள்ள சந்தேகம் தான் அது பெரிய சண்டையாக மாறி அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார் அன்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை முற்றிப் போய் உள்ளது. அதனால் கிருஷ்ணகுமார் தான் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து மனைவியை சுட்டுக்கொன்று உயிர் பிரியும் வரை அங்கேயே இருந்துள்ளார். இறந்த பின் அவர் மீண்டும் வடக்கஞ்சேரிக்குச் சென்றுள்ளார். அதன்பின் என்ன செய்வதென்று அறியாமல் அவர் whatsappபில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, அதாவது அதில் தான் தன் மனைவியை சுட்டுக் கொன்றதாக அவரை கூறிவிட்டு அவரும் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.