கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மிகவும் நிதானமாக பேட்டிங் செய்த நிலையில் கிரிக்கட் ரசிகர்கள் சிஎஸ்கே அணியை கலாய்த்து வருகின்றனர்.
நேற்று டெல்லி மற்றும் சென்னை இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்து டெல்லி அணி 183 ரன்கள் அடித்தது இதில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 77 ரன்களும் அபிஷேக் பொரேல் 33 ரன்களும், எடுத்திருந்தன. 20 ஓவர் முடிவில் 183 ரன்கள் அடித்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது டெல்லி.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி இந்த இலக்கை எட்ட முடியாமல் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்குக் காரணம் சென்னை அணி மிகவும் நிதானமாக பேட்டிங் செய்ததுதான். தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க களத்தில் விஜய் சங்கர் மற்றும் தோனி இருந்தனர். இருவருமே வெற்றியை விரைவில் எட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பேட்டிங் செய்யாமல் மிகவும் நிதானமாக ஆடினர்.
அது மட்டுமல்லாமல் நிறைய டாட் பால்கள் ஆடின. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு டாட்பாலுக்கு ஒரு மரம் நடப்படும் என்பது தெரிந்த ஒன்று. அதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே அணி அதிகபடியான டார்க்மான்கள் விளையாடியதால் மரம் நடுவோம் மழை பெறுவோம் என கலாய்த்து வருகின்றனர். விஜய் சங்கர் 54 பந்துகளுக்கு 69 ரன்களும், எம் எஸ் தோனி 26 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தன.