கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் குறைவான இடங்களில் ஆட்டம் இழந்து சென்றது எடுத்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது.
தொடர்ந்து பஞ்சாப் அணி களமிறங்கி வெறும் 16.2 ஓவர்களில் ஆட்டத்தையே முடித்து வைத்தது. பிரப்சிம்ரன் சிங் ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா இருவரும் அபார பேட்டிங் வெளிப்படுத்தி குறைவான ஓவர்களில் போட்டியை முடித்து வைத்தனர்.
இந்த போட்டி முடிவடைந்த பின் லக்னோ அணியின் கேப்டன் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ரிஷப் பண்ட் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்கவில்லை இரண்டாவது போட்டியில் 15 ரன்களும் நேற்று நடைபெற்ற போட்டியில் 2 ரன்களும் எடுத்து பெரிய ரன் ஏதும் சேர்க்காமல் விக்கெட்டை இழந்து வருவது பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது இவருக்கு எதற்காக ரூ 27 கோடி என தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.