கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சென்னை இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி.
நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று இரவு சென்னை மற்றும் கொல்கத்தா இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரகானே 48 ரண்களும் ரசல் 38 ரண்களும் மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்திருந்தன. சென்னை பவுலர் நூர் அகமது நான்கு விக்கெடுகளை வீழ்த்தி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் இறங்கியது. இதுவரை எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான பேட்டிங்கை தொடக்கத்தில் கொடுத்தது சென்னை அணி. பவர் பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் சென்னை அணி வெற்றி பெறுமா என மிகப் பெரிய கேள்வி குறி எழுந்த நிலையில் களம் இறங்கினார் டெவால் பிரேவிஸ்.
ரசிகர்களால் குட்டி ஏபிடி என அழைக்கப்படும் பிரவிஷ் அதிரடியான அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இவர் 25 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அரை சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமல்லாமல் இன்று புதிய வீரராக களமிறங்கிய உர்வில் பட்டேல் 11 பந்துகளுக்கு 31 ரன்களை வீசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் எட்டு விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 19.4 ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.