பிரேசிலியா: பிரதமர் மோடி நமீபியா, பிரேசில், அர்ஜென்டினா, கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . ஏற்கனவே கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய நாடுகளுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார் நரேந்திர மோடி.
இரு நாடுகளின் உயரிய விருதை மோடிக்கு வழங்கி சிறப்பித்தனர். 57 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் இந்த பயணமானது முதல் இருதரப்பு பயணமாக அமையும். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு பின் பிரேசில் சென்றார் மோடி. கடந்த ஆறாம் தேதி காலை பிரேசிலில் நடைபெற்ற 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்.
ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்த பின் 17 வது உச்சி மாநாட்டில் பங்கு பெற்றார். உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது, 21 ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியில் விளிம்பு நிலையில் உள்ளது என்று பேசினார்.
சர்வதேச அமைப்புகள் விரிவான சீர்திருத்தங்களை, அவசரத் தேவைகளை சுட்டிக்காட்டி பேசினார். மேலும் இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டி பேசினார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ் கேனல் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார் மோடி. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளி விவகாரத்துறை மந்திரி எஸ். ஜெய சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரேசிலில் ஜனாதிபதி லுலா அழைப்பில், இன்று காலை பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவிற்கு சென்றார். அப்போது சம்பா ரெக்கை என்ற பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்தி பிரதமரை வரவேற்றனர்.
இந்திய வம்சாவளியினர் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் தேசியக்கொடிகளை கையில் ஏந்திய படி வரவேற்றனர். கலாச்சார நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிறைவில் நிகழ்ச்சி கலைஞர்களுடன் உரையாற்றினார். பிரேசில் நாட்டு பயணம் நிறைவடைந்த நிலையில் இறுதி பயணமாக நமீபியா நாட்டிற்கு செல்ல இருக்கிறார் மோடி.