மார்ச் மாதம் முதல் எல்பிஜி எரிவாயுகளின் மதிப்பு உயர வாய்ப்பு!! எதனால் தெரியுமா!
எல்பிஜி சிலிண்டர்களின் நிலை ஒவ்வொரு மாதமும் வரவுகளை பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இவை ஏர் டர்பைஃன் எரிபொருள் (ATF) எனும் ஜெட் எரிபொருள் விலைகள் எண்ணெய் நிறுவனங்களின் நிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இதன் மானிய விலை அதிகரித்தால் வீட்டு சிலிண்டர்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தும் அதிகரிக்கும். எனவே இதன் விலை மதிப்பானது மிக முக்கிய தகவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதில் விலை உயர்ந்தால் அனைத்து விதமான உணவு சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையும் உயரும். இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு பட்ஜெட் போட்டு வாழும் குடும்பத்தினர் பாதிக்கப்படுவர். இந்த விலை உயர்வானது நுகர்வோர் மற்றும் வணிகங்கள் இரண்டையும் பெரும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த எரிவாயுவின் விலை இந்த மாதம் முதல் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் டி ஏ உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இந்த மாதம் வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி என் ஜி மற்றும் பி என் ஜி ஆகிய எரிவாயு மதிப்பாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தற்சமயம் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூபாய் 1965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகில உலக கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பை அடிப்படையாக வைத்து இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றது. ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் குறைந்து இருந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தற்சமயம் ரூ.5.50 அதிகரித்துள்ளது. 14 கிலோ சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


