சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். சைப்ரஸ் விமான நிலையத்திலிருந்து அதிபர் நிக்கோஸ் கிரிஸ்டோ டோலிஸ் சால் வரவேற்கப்பட்டார் பிரதமர். சர்வதேச அளவில் ஆங்காங்கே போர்கள் நடக்கும் நிலையில் மோடி அவர்கள் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது பேசு பொருளாக விளங்குகிறது. 2026 ல் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்ச்சி தலைவர் பதவி ஏற்க உள்ளது.
இரு நாடுகளின் ஒப்பந்தங்கள்:
நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் அதில் சைப்ரஸ் முதல் நாடு ஆகும். பின் கனடா மற்றும் குரோஷியாவிற்கு செல்லவிருக்கிறார் மோடி. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2002ல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அந்த நாட்டிற்கு பயணம் சென்றுள்ளார். அதற்குப் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் துருக்கி:
இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக துருக்கி உதவியோடு அரசியல் ரீதியாகவும் ஆதரித்து கொண்டிருந்தது. துருக்கி 1977-ல் சைப்ரஸ்-ன் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பாகிஸ்தானும் துருக்கியும் சேர்ந்து இந்தியாவை எதிர்க்கும் நிலையில் காஷ்மீர் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்றவற்றில் சைப்ரைஸ் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், சைப்ரஸ்-ஐ நெருக்கமாக்கினால் ஐரோப்பாவிற்கு நெருக்கமாக முடியும் என்ற நோக்கில் இந்தியாவும் செயல்பட்டு வருகிறது. இன்று மோடியை சைப்ரஸ் அதிபர் மாளிகையில் வரவேற்க உள்ளனர். மேலும், சைப்ரஸில் இருந்து கனடாவுக்கு ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரதமரின் 3 நாடுகளுக்கான பயணத்தின் கடைசியாக குரோஷியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு அதிபர் ஜோரான் மிலாநோவிச் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரை சந்திக்க உள்ளார்.





