ஜெருசலேம்: ஈரான் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மழைபோல் பொழிந்து வரும் நிலையை ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கு இடையே சில நாட்களாக தொடர்ந்து மோதல்கள் நிலவி வருவதால் ஆங்காங்கே பதற்றம் நிலவி வருகிறது. உலக நாடுகளின் மத்தியில் போர் நிலவுவதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருவதால் சமாதான பேச்சுவார்த்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த தாக்குதலின் போது பலர் படுகாயம் அடைந்ததாகவும் பல சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.
மத்திய இஸ்ரேலில் உயரமான கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் தாக்குதலின் போது 16 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரானில் உள்ள ஆராக் கன நீர் உலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்ய அதிபர் புதின் அறிக்கை ஒன்றை அதிபர் மாளிகையில் வெளியிட்டுள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான பரஸ்பர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நான் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினார். அது தொடர்பாக வெளிநாட்டு தலைவர்களுடன் பேசி வருவதாகவும் எடுத்துரைத்தார்.





