தனி ஆளாக போராடிய டேவிட் மில்லர்!! ஆட்டத்தை மாற்றிய சான்ட்னர்!!

David Miller fought alone

கிரிக்கெட் : நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான அரையிறுதி போட்டியில் டேவிட் மில்லர் தனி ஆளாக போராடி சதம் விளாசினார்.

நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி வெளியேறும் வெற்றி பெறு மணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உடன் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறியது நியூசிலாந்து, இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து சரித்திர சாதனை படைத்தது நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் இரட்ச்சின் ரவீந்திர இருவரும் சதம் விலாச ஓவர்கள் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 362 ஆக இமாலி இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது அணியின் கேப்டன் தெம்பா பவுமா 56 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ராசி வான்டர் டசன் 69 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார், பெரிதும் எதிர்பார்த்த ஹென்ரிச் கிளாசென் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இந்த விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என கூறலாம். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 67 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 149 ஆக இருந்தது இருந்தும் 50 ஓவர்களில் 312 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா அணி இதனால் தோல்வியை தழுவி வெளியேறியது இதில் முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் தட்டி தூக்கினார்

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram