கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி டாஸ் என்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் அதிகபட்சமாக ஜூரல் 33 ரன்கள், ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுத்திருந்தனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மொயின் அலி என தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவர் முடிந்த நிலையில் ராஜஸ்தான் 151 ரன்கள் அடித்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என கலங்கிய கொல்கத்தா அணி தொடக்க முதல் டீ காக் தேவைப்படும்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியும் மற்ற நேரத்தில் நிதானமாக விளையாடும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 97 ரகளை விலாசினார். இதில் எட்டு பௌண்டரிகள் ஆறு சிக்சர்கள் அடங்கும்.
இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கிய ரகுவன்ஷி நிதானமாக தட்டிக் கொடுக்க இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த போட்டியை வெற்றி முனைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தானி தற்போது வரை முதல் வெற்றிக்கான தேடலில் உள்ளது