மௌனத்தால் மறைக்கப்பட்ட மரணம்!! மனசாட்சியால் வெளிவந்த உண்மை!!

தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக் கிடந்தது மண்ணுக்குள், மரணத்தோடு! 67 வயதான பொண்ணுக்கிளி, இந்தக் கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி. பிள்ளைகள் இருவரும் வெளியூரில், வாழ்ந்து வந்துள்ளனர். அருகிலுள்ள வீட்டில் வசித்தவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொண்ணுக்கிளியை மருத்துவரிடம் அழைத்து சென்றார், கவனித்து கொண்டும் வந்தார், பக்கத்தில் இருந்து உதவினார்.

அந்த நம்பிக்கையின் காரணமாக, சொத்தில் சில பங்குகளை அவருக்கே எழுதி வைத்தார். ஆனால், அதற்குப் பிறகு மனது மாறியது கவனிப்பு குறைந்தது, அக்கறை சிதைந்தது. காவல் நிலையத்தில் நியாயம் தேடி சென்றார். “எனது விருப்பத்தோடு தான் எழுதி கொடுத்தேன், ஆனால் அவர் பாதிப்பை உருவாக்குகிறார்,” எனது சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் தீர்ப்பு மூதாட்டிக்கு எதிராகவே வந்தது. அந்த நாளில், பொண்ணுக்கிளி ஆடுகளை மேய்க்க வெளியில் சென்றிருந்தார். அதே நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நாய்க்குட்டியை தேடி வந்தான். ஆனால், இடையில் மூதாட்டி அவரை பார்த்து கடும் வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனால் கோபமடைந்த சிறுவன் ஒரு இரும்பு கம்பியை எடுத்து வேகமாக தாக்கினான் இதில் மூதாட்டி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிர் இழந்தார். யாருக்கும் தெரியாமல் மூதாட்டியை மண்ணில் புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 10 மாதங்கள் போலீசார் விசாரித்தும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. திடீரென்று குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.“நான் தான் அந்த மூதாட்டியை கொலை செய்தேன். யாரும் என்னைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்த மௌனம் தான் என்னைத் தினமும் கொன்று கொண்டிருக்கிறது.” தினம் தினம் நரகத்தில் இருப்பது போல் உள்ளது. என தனது மன அழுத்தத்தைப் பகிர்ந்த சிறுவன் கதறும் குரலில் பெரும் அழுத்தத்தில் பேசினார். போலீசாரை பார்த்தால் நடுங்கி ஒளிந்துவிடுவேன். கதவு தட்டும் சத்தம் கேட்டா கூட உன் இதயம் நின்றுவிடும் போல இருக்கும் என கூறினான். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பினர்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram