தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் உள்ள சுந்தரபாண்டிய புரத்தில் தனியார் முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் உணவு ஒவ்வாமையால் அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த 4 பேரில் மூன்று பேர் பெண்கள் என்றும், ஒருவர் ஆண் என்பதும் குறிப்பிடப்பட்டது. உணவு ஒவ்வாமை விவாகரத்தில் தனியார் முதியோர் காப்பகத்தின் நிர்வாகி ராஜேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்படி சம்பவர்வடகரை போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர்களின் கடந்த 17ஆம் தேதி ஒருவர் உயிரிழந்துள்ளார். முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக பலி எண்ணிக்கை ஐந்தாக இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை தற்போது ஆறாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த சிகிச்சையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.