வாயை கொடுத்து வாங்கிகட்டிய வேல்முருகன்!! விஜய் குறித்து அவதூறு பேச்சு!! பறிபோகும் பதவி!! 

Defamatory remarks about Vijay

மூத்த நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை என்கரேஜ் செய்யும் வகையில் இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கி, பொன்னாடை போர்த்தி பாராட்டு விழா நடத்தி வருகிறார். இந்த வருடம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து நிகழ்ச்சி நடத்தி இருந்தார். தொடர்ந்து 14 மணி நேரம் அயராது நின்று உழைத்து அந்நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து இருந்தார்.

 

இந்நிகழ்ச்சி குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இரண்டு கிராம் தங்கத்துக்காக கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைப்பதாக அவதூறாக பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சைக் கேட்க பெற்றோர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவரும் கொந்தளித்து எழுந்தனர். இவரின் இந்த பேச்சுக்காக பல இடங்களில் இவர் மீது வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தான் பேசியது சரி என்று வேல்முருகன் மன்னிப்பு கூட கேட்க மறுத்து விட்டார்.

 

தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் ஆதித்ய சோழன் இந்த வழக்கை அவர் பேசிய பதிவோடு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில சபாநாயகர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆங்காங்கே உள்ள காவல் நிலையங்களில் இவர் குறித்து புகார் கொடுத்து வருகின்றனர். கூடிய விரைவில் இவர் போக்ஸோ சத்தத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் பதவியும் பறிபோகலாம் என்று கூறப்படுகின்றது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram