Cricket: ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்த தொடரின் டெல்லி மற்றும் சென்னை இடையிலான போட்டி நடைபெற்றது இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை இரு அணிகளும் மோதின. இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றி பெற்றது இது மூன்றாவது போட்டியில் சென்னை உடன் மோதியது. தொடர் இரண்டு கேள்விகளுக்குப் பின் சென்னை அணி டெல்லி அணியுடன் இந்த போட்டியில் விளையாடியது.
முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டெல்லி அணியில் முதல் போட்டியில் சில காரணங்களுக்காக போட்டியில் விளையாடறதுக்கு அடுத்த இரண்டு போட்டியில் விளையாடினார், முதல் போட்டியில் 15 ரன்கள் ஆட்டம் விளக்க இரண்டாவது போட்டியில் 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் 183 ரன்கள் எடுத்து இலக்கை நிர்ணயித்தது டெல்லி அணி தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரர்கள் ஆட்டம் இழக்க தடுமாறி வந்தது விஜய் சங்கர் மற்றும் தோனி களத்தில் இருக்க இறுதிவரை இலக்கு எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெல்லி அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது சென்னை அணி.