கிரிக்கெட்: ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று டெல்லி மற்றும் லக்னோ இடையே நடைபெற்றது.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி மற்றும் லக்னோ அணி இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களம் இறங்கினர் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்கரம். இதில் மிச்சல் மார்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். இதில் ஆறு சிக்ஸர்கள் ஆறு பௌண்டரிகள் அடங்கும். 15 ரன்களில் மார்க்ரம் ஆட்டத்தை இழக்க பூரன் களம் இறங்கினார். எப்போதும் போல எதிர் அணி பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார் பூரன் வெறும் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவு பெற்ற நிலையில் லக்னோ அணி 209 ரன்கள் அடித்து இருந்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரரான மெக் கர்க் ரசிகர்களை ஏமாற்றி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து கிளம்புறீங்க அபிஷேக் போரல் டக் அவுட் ஆனார். இப்படி டெல்லி பேட்ஸ்மேன்கள் திணறி வந்த நிலையில் புதிய வீரரான விப்ராஜ் நிகம் மற்றும் ஸ்டப்ஸ் குறைவான பந்துகளில் ரண்களை விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசுத்தோஷர்மா வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆறு எண்கள் அணிக்கு தேவை என இருந்த நிலையில் அசுதோஷ் சர்மா கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து திரில்லான வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி.