கிரிக்கெட் : டெல்லியில் புதிய கேப்டனை அறிவித்துள்ளது டெல்லி அணி மற்றும் அதன் பிளேயிங் லெவன்.
இந்தியாவில் மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பல நாடுகள் என்று ஐபிஎல் என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஐபிஎல் தொடர் ஆனது வருகிற 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளின் புதிய கேப்டன் மற்றும் மாற்றங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லி அணியில் ஒரு புதிய குழப்பம் உருவான நிலையில் அதாவது இங்கிலாந்தின் ஹாரி குரூப் இங்கிலாந்து தொடர்களில் கவனம் செலுத்த வேண்டும் என ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் ஐபிஎல் விதிகளின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் க்கு தடை விதித்துள்ளது. மேலும் டெல்லி அணியின் புதிய கேப்டன் யார் என்று நாளை காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
தற்போது டெல்லி அணியின் புதிய கேப்டன் யார் என்பதை தெரிவித்துள்ளது டெல்லி அணி. புதிய கேப்டனாக கே எல் ராகுலை கேட்டபோது அதனை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது. எனவே தற்போது புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டதாக டெல்லி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த அணியின் கே எல் ராகுல் கேப்டனாக பிரஷர் இல்லாமல் போட்டி சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும் டெல்லி அணியின் ப்ளேயிங் லெவன் மெக்கர்க், கே எல் ராகுல், அபிஷேக் போரல், பஃப் டு பிளசிஸ், ஸ்டப்ஸ், அக்சர் படேல், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், நடராஜன், முகேஷ் குமார்(I).