கிரிக்கெட்: இன்று டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழக்கும்.
நடைபெற்று வரும் ஐ பி எல் தொடரில் நிறைய எதிர்பாராத திருப்பங்களுடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரில் நாம் எதிர் பார்த்த அணிகள் சிறப்பாக விளையாடவில்லை. எதிர்பார்க்காத அணிகள் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டி சில நாட்கள் நடைபெறவில்லை. அதன் பின் மீண்டும் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று சி எஸ் கே மற்றும் ஆர் ஆர் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நேற்று ஆர் ஆர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. மேலும் இந்த இது அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி பிளே ஆப் தகுதி பெரும், தோல்வியடையும் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறும். இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. டெல்லி அணி கடைசியாக விளையாடிய போட்டியில் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த முறையும் டெல்லி அணி தோல்வியை தழுவினால் வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்படும். மும்பை அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெரும். அதனால் இரு அணி ரசிகர்களும் மிக ஆவலுடன் இந்த போட்டியை எதிர் பார்த்து காத்திருக்கின்றன. இந்த போட்டியில் வெல்ல போவது யார்??