விபத்தில் சிக்கிய துணை முதலமைச்சரின் மகன்!! தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!

ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அள்ளூரி சீதாராமராஜு மாவட்டம் அரக்கில் திடீரென சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்கு பயணிக்க உள்ளார்.

 

காரணம் அவரின் இளைய மகன் மார்க் ஷங்கர் பவனோவிச், சிங்கப்பூரில் உள்ள தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரின் கைகள் கால்கள் காயமடைந்ததோடு புகை நுரையீரலுக்குள் புகுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதனை தொடர்ந்து அவருக்கு தகவல் கிடைத்தவுடன் பவன் கல்யாணிடம் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அவரை சிங்கப்பூருக்கு விரைவில் செல்லுமாறு ஆலோசனை அளித்துள்ளார் ஆனால் அவர் அரக்கு அருகே உள்ள குரிடி கிராமத்தில் முன்பே வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அக்கிராம மக்களை சந்தித்து அங்கு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி வளர்ச்சி நடவடிக்கைகளை முடித்து வைத்த பிறகே அவர் சிங்கப்பூர் செல்வதாக தெரிவித்துள்ளார்.

 

மார்க் ஷங்கர் தற்பொழுது தனது தாய் அண்ணா லெஜ்னேவாவுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அண்ணா லெஜ்னேவா கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நேஷனல் யூனிவர்சிட்டியில் இருந்து MA பட்டம் பெற்றார் அதன் பிறகு அவரும் அங்கு தான் வசித்து வருகிறார். இந்த தீ விபத்து அவரின் பள்ளியில் நடந்தது என தகவல் வெளிவந்ததும் மேலும் அவரது மகனுக்கு காயம் ஏற்பட்டதை தெரிய வந்ததிலிருந்து ஜனசேனா கட்சியினரும் பவன் கல்யாண் ரசிகரும் பெரும் வருத்தத்தில் உள்ளனர். பவன் கல்யாண் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram