டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உணர்ச்சியின் வெளிப்பாடு!! தனுஷின் புகழாரம்!!

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த ஒரு பாசிட்டிவ் எண்டிங் திரைப்படம். அதிலும் இந்த படத்தை இயக்கியவர் ஒரு அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவன்த். இந்த படம் மிக எளிய கதை கரு கொண்டு எல்லோருடைய மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் நன்கு ஓடிய திரைப்படமாகவும் இது காணப்பட்டது. அபிஷன் தனது முதல் படத்தின் மூலமே சூர்யா, ரஜினிகாந்த் போன்ற முக்கிய பிரபலங்களிடமிருந்து பாராட்டுகளை அள்ளியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் உணர்ச்சி மிகுந்த கதை கருவாக பதிந்துள்ளது.

இவர்களை தொடர்ந்து சமீபத்தில் தனுஷும் குபேரா பட வெற்றி விழா அரங்கில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் பற்றி புகழாரம் பேசியுள்ளார். அவர் அந்நிகழ்ச்சியில் கூறியதாவது, இந்த காலத்தில் எல்லாம் ரத்தம் தெறிக்கும் பாம் வெடிக்கும் ஆகிய சண்டைக் காட்சி நிரம்பிய படங்கள் தான் நல்ல ஹிட் அடிக்கும் என்ற டாக் உள்ளது. இந்த மாய பேச்சை முற்றிலும் முறியடித்துள்ளது டூரிஸ்ட் ஃபேமிலி. நல்ல திரைப்படமும் பார்வையாளர்களை தியேட்டருக்கு வர வைக்கும் என்று இப்படம் நிரூபித்துள்ளது. மனித உணர்ச்சியின் வெளிப்பாடான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மனித உணர்ச்சிகளை விட ஒரு ட்விஸ்ட் கொடுக்கும் காட்சி அதைவிட இந்த உலகில் பிரமாண்டம் ஏதுமில்லை. டூரிஸ்ட் பேமிலி ஓடியதே அதற்கு சான்று. இது போன்ற படங்களையும் மக்கள் பார்க்க தயாராக உள்ளார்கள் என்று அவர் டூரிஸ்ட் பேமிலி குறித்து சிறப்பானதாக கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram