தனுஷ் கடைசியாக குபேரன் திரைப்படத்தில் நடித்து அந்த படம் சென்ற மாதம் வெளியாகி இருந்தது. தமிழ் திரை உலகில் பெரும் வரவேற்பு பெறவில்லை என்றாலும், தெலுங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இது தமிழ் திரையுலகில் போதிய வரவேற்பு பெறாததை அந்த படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்லா தனக்கு மிக வருத்தமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதற்கு முன்னரே தனுஷின் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் தயாராக இருந்தது. ஆனால் வெளியீடு ஏன் கால தாமதம் ஆகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்நிலையில், அவர் இயக்கிய ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தன. இட்லி கடை படம் குறித்த தகவல் சமீபகாலமாக வெளியாகாமல் இருந்தது. அந்த படம் வெளியாக இருக்கும் நேரத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லீ திரைப்படம் வெளியாக இருந்ததால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் இந்த பட குழு சார்ந்தவர்கள் இடையே ஒரு பேச்சு வெளி வருகிறது. கூடிய விரைவில் இதன் இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதாகவும், அக்டோபர் மாதம் இதன் வெளியிடு இருக்கும் எனவும், அது பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படம் வெளியிட்டு நாளை ஒத்து வரும் என்றும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையே ஹிந்தியில் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெயின் என்கிற திரைப்படத்தையும் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் பட முடிவின் வெற்றியை தனுஷ் சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் படக்குழுவினருடன் கொண்டாடியிருந்தார். அது சமீபத்தில் மிக ட்ரெண்டிங்காக மாறி இருந்தது.