சென்னை: நடிகர் தனுஷ் சர்ச்சையில் சிக்கிய வீடியோக்கள் சமீப காலமாக அதிகமாக இருக்கிறது. தனுஷ் நடித்த திரைப்படம் குபேரா கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவில் வதந்திகளை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோபமாக பேசியது தற்போது பகிர்ந்து வருகிறது சோஷியல் மீடியாக்கள்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் தனுஷ். சினிமாவை கற்றுக் கொடுத்தவர் அவருடைய அண்ணன் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் புதுக்கோட்டை சரவணன் போன்ற படங்களில் அவருக்கென அடையாளத்தை கொடுத்துள்ளது.
ஆடுகளம், அசுரன், வடசென்னை மற்றும் கர்ணன் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் இன்னொரு முகத்தை காட்டியது. நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் வெற்றியடைந்துள்ளார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி தனுஷ் நடித்திருக்கும் படம் குபேரா. நேற்று (ஜூன் 1) சென்னையில் இடம் இசை வெளியீடு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் என்னைப் பற்றி எவ்வளவு வதந்திகள் வேண்டுமானாலும் பரப்புங்கள், எவ்வளவு தவறான செய்திகளை பரப்ப முடியுமோ பரப்புங்க, என்னுடைய படம் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே தவறான செய்திகளை பரப்ப ஆரம்பித்து விடுகிறார்கள்,தம்பிகளா கொஞ்சம் அந்தப் பக்கம் போய் விளையாடுங்க என்றும் பேசியுள்ளார். மேலும் பேசியவர் நீங்க சும்மா நாலு வதந்தியை பரப்பி காலி பண்ணிடலாம்னு நினைச்சா அதை விட ஒரு முட்டாள்தனம் எதுவும் கிடையாது.
உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது என்றும் பதிலடி கொடுத்தார். நயன்தாரா தன்னுடைய டாக்குமெண்டரிக்காக “நானும் ரவுடிதான்” திரைப்படக் காட்சிகள் இருந்து சில காட்சிகளை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டிருந்தார் தனுஷ். திரை உலக பிரபலங்கள் யார் விவாகரத்து செய்தாலும் தனுஷ் தான் காரணம் என்ற ஒரு வதந்தியும் பரவி வந்த நிலையில் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்துக்கு தனுஷ் என்று பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியிருந்தார்.