90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன், இப்போது அமெரிக்காவில் ஐடி வியாபாரத்தில் வெற்றியாளராக சிறந்து விளங்குகிறார். சமீப காலமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் பதிவிடும் vlog வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கிய நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். தனுஷுக்கு அறியவகை தசை சதைவு நோய் இருப்பதால், சிறந்த சிகிச்சை மற்றும் வசதிகளுக்காகவே அவர் அங்கு நிலை கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு தனுஷுக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நெப்போலியன். அந்த மகிழ்ச்சி தருணத்திற்கு பிறகு தனுஷின் உடல்நிலை குறித்து வெளிவந்த புதிய வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது நெப்போலியனின் வீட்டுக்கு சென்று தனுஷை சந்தித்தார். அந்த சந்திப்பு வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தனுஷின் உடல் மிகவும் மெலிந்ததாகவும், அவர் வலிமையிழந்திருப்பது போலவும் காணப்படுவதால் ரசிகர்கள் “என்ன ஆயிற்று?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் வீடியோவில் தனுஷின் மனைவி இல்லாதது குறிப்பிடத்தக்கது. அவரைப் பற்றியும் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தனுஷ் விரைவில் உடல்நலத்தை மேம்படுத்தி, பழைய உற்சாகத்துடன் திரும்ப வேண்டும் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.