சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில பழங்கள் மிகவும் உதவியானதாக இருக்கின்றன. அவை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவையாகவும் அதாவது சர்க்கரையை மெதுவாக உயர்த்தும் பழங்களாக இருக்கின்றன.
✓ நாவல் பழம் :-
இயற்கையாகவே இன்சுலின் சிறப்பை தூண்டக்கூடிய பழமாகவும் ஜாம் பல விதையை உலர்த்தி பொடி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
✓ பேரிக்காய் :-
நார்ச்சத்து அதிகம் கொண்ட பழமாகவும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. பேரிக்காயை தேர்வு செய்து சாப்பிடும்பொழுது அதிக பச்சை நிறத்தில் இருப்பதை தேர்வு செய்வது நல்லது.
✓ ஆப்பிள் :-
அதிக பைபர் பிளட் சுகர் ஸ்பைக் போன்றவற்றை தடுக்க கூடியதாகவும் சிறந்த சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகவும் விளங்குகிறது.
✓ மாதுளை :-
அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட் கொண்ட பழமாகவும் இன்சுலினின் உணர்வு தன்மையை மேம்படுத்தக்கூடிய பழமாகவும் இருக்கிறது
✓ ஸ்ட்ராபெரி & ப்ளூபெர்ரி :-
இந்த வகை பழங்கள் குறைந்த சர்க்கரை அளவு மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட் கொண்டவையாகவும் இவற்றை சிறிய அளவு எடுத்துக் கொள்வது உடலுக்கு அதிக அளவு நன்மை தரக்கூடியதாகவும் இருக்கிறது.
✓ பப்பாளி :-
இதில் வைட்டமின் ஏ மற்றும் சர்க்கரையை சமமாக வைத்திருக்க உதவக்கூடிய சத்துக்களும் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் மிகவும் சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பலா மாம்பழம் திராட்சை போன்ற உயர் சக்கரை அளவை கொண்ட பழங்களை தவிர்ப்பது அவசியம்.