இதுக்கு பாகிஸ்தானே பரவால்ல!! படுமோசமாக பில்டிங் செய்த திண்டுக்கல் அணி!! கொந்தளித்த அஸ்வின்!!

Dindigul team's poor fielding

கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய போட்டியில் பாகிஸ்தான அணி போலவே பில்டிங்கை வெளிப்படுத்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக விளையாடி முடிந்த நிலையில் பெங்களூர் அணி கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் எட்டு அணிகள் இடம்பெற்ற நிலையில் 4 அணிகள் வெளியேறி நாலு அணிகள் தகுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.

நேற்று முன் தினம் திண்டுக்கல் மற்றும் மதுரை இரு அணிகளும் மோதிய போட்டியில் திண்டுக்கல் அணி 13 வது ஓவரில் மிகவும் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன் சனி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மதுரை பாந்தர் சனி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய திண்டுக்கல் அணி 13 வது ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இலக்கை அடைந்து எளிதான வெற்றியை பதிவு செய்தது.

இதில் திண்டுக்கல் அணி பவுலிங் செய்த போது விக்கெட் வாய்ப்பு இழந்து மூன்று ரன் அவுட்டுகளை மிஸ் செய்து எக்ஸ்ட்ரா ரன் கொடுத்தது திண்டுக்கல் அணி இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதில் ஒரு சிலர் பாகிஸ்தான அணியை விட மோசமாக பில்டிங் செய்துள்ளது எனவும் கிண்டல் செய்து வருகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram