பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சிப் புயலாக வலம் வரும் நடிகை திஷா பதானி, சமீபகாலமாகத் தனது ஆடைத் தேர்வுகளால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவர் அணிந்திருந்த அதீத கவர்ச்சி உடை, இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. பலரும் அவரது ஆடையை விமர்சித்து கமெண்ட் செய்த நிலையில், அதற்குத் திஷா தற்போது அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “நடிகைகளைத் திரையில் ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் உடைகளை வைத்து அவர்களை விமர்சிக்காதீர்கள்” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஒரு நடிகையாக என்ன உடை அணிய வேண்டும் என்பது எனது உரிமை. கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் இடையிலான மெல்லிய வித்தியாசம் தெரியாமல் யாரும் இந்தத் திரையுலகிற்கு வரவில்லை. ஒரு உடையை எப்படி நேர்த்தியாக வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என அவர் காட்டம் தெரிவித்துள்ளார். மேலும், கலைஞர்களின் திறமையை விட அவர்கள் அணியும் ஆடைகளுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விமர்சிப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்த பிறகு தமிழகத்திலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள திஷாவின் இந்தப் பேச்சு, தற்போது இணையத்தில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினர் பொது இடங்களில் ஆடைத் தேர்வில் கவனம் தேவை என கருத்து தெரிவித்து வருகின்றனர். எதற்கும் அஞ்சாத திஷாவின் இந்த ‘போல்ட்’ அணுகுமுறை, சினிமா வட்டாரத்தில் அவருக்குப் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்து வருகிறது.


