அரசு ஊழியர்களை தாக்கும் திமுக!! 2026 இல் தோல்வியே பரிசாக மாறும் நிலை!!

DMK attacks government employees

பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பத்து கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பானது இன்று போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உள்ள தமிழக அரசு இன்று போராட்டத்தில் ஈடுபடக்கூடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மிரட்டி இருக்கிறது.

இதுகுறித்து பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது :-

2021 சட்டசபை தேர்தலில் திமுக அரசானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை என்றும் இது குறித்த அமைச்சர் அவை கூட்டத்தோடு பேச்சு வார்த்தை நடத்திய பொழுதிலும் அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு பட்ஜெட் தாக்கல் இன் பொழுது பலன் உண்டு என தெரிவித்து மீண்டும் அவர்களை ஏமாற்றி இருக்கின்றனர்.

இவ்வாறு செய்வது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினுடைய வெறுப்பை பெறுவதற்கான நேரமாக மாறி இருக்கிறது என்றும் இதற்கான பரிசை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவர்கள் திருப்பி வழங்குவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பானது பத்து கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்திருந்ததாகவும் அதில் பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் காலியாக இருக்கக்கூடிய ஆசிரியர் பணிகளை நிரப்புதல் போன்ற முக்கிய கோரிக்கைகள்தான் இடம் பெற்று இருந்தது என்றும் இவற்றை தமிழக அரசு நினைத்தால் நிறைவேற்றி விடலாம் ஆனால் நிறைவேற்றாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அலைய விடுவதோடு அவர்களின் கோபத்தையும் திமுக அரசு வாரிக்கொட்டிக்கொள்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram