tvk :தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தே இறங்கிய பிரசாந்த் கிஷோர் அவர்கள் இன்று நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு துணை நின்ற பிரசாந்த் கிஷோர் அவர்கள் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்திற்கு துணை நிற்பது திமுகவை கலங்க வைப்பதாக அமைந்ததை முன்னிட்டு பல்வேறு அரசியல் யூகங்களை செயல்படுத்த திமுக முடிவெடுத்து இருக்கிறது.
ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு 20 சதவிகித ஓட்டு வங்கி இருப்பதாகவும் இவர்களால் மட்டுமே திமுக கூட்டணி கட்சிகளின் உடைய ஓட்டு வங்கியை உடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்ததோடு இளைஞர்களை தங்கள் பக்கம் இருப்பதற்கான வியூகங்கள் மற்றும் அரசியல் யுத்திகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார். மீண்டும் ஒருமுறை சந்திப்பை என்பது திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டி வைப்பதாக அமைந்திருக்கிறது.
தற்பொழுது திமுக அரசானது அரசியல் வியூகத்திற்கு பிரசாந்த் கிஷோர் இல்லை என்றால் என்ன என்பது போல மற்றொரு நிறுவனத்தை நாடி இருப்பது யாருடைய வியூகம் வெற்றியை கொடுக்கும் என அரசியல் விமர்சகர்களிடம் பேச்சுவார்த்தையாக அமைந்திருக்கிறது.
அதாவது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா என்ற பிரிவோடு சேர்ந்த திமுக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. இந்த நிறுவனமானது சந்திரபாபு நாயுடு அவர்களுக்காக பணிபுரிந்து வெற்றியை தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது