மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து பலவிதமான கருத்துக்களை முன்வைத்து எதிர்த்து வருகிறது. பலரும் மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பிற்காக மட்டுமல்ல பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். திமுக அரசும் மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமென்றாலும், கற்றுக் கொள்ளட்டும். அதை கட்டாயமாக்காதீர்கள் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக அரசும், பாமக, தவெக ஆகிய அரசுகளும் சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திமுகவிற்கு உறுதுணையாக இணைக்கும் காங்கிரஸ் பாஜக விடம் சிக்கி திணறி வருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் சப்போர்ட் செய்யும் திமுக கட்சியினர் ஹிந்தியை எதிர்த்து இப்படி பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று வட மாநிலங்களில் பாஜக அரசு செய்தியை பரப்பி வருகிறது. திமுகவிற்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு ஹிந்தி பேசும் மக்களுக்கு பதில் கூறி வருகின்றனர். இந்த வருடத்தில் பீகாரில் எலக்சன் இருப்பதால் இதை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முற்பட திட்டமிட்டுள்ளது பாஜக.
அதற்கு காங்கிரஸ் கட்சியினரும், தென்மாவட்டங்களில் ஹிந்தியின் முக்கியத்துவம் தேவை இல்லை என்று அவர்கள் அங்கு பரப்புகின்றனர். அது வட இந்தியர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்று எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக, திமுக இடையே காங்கிரஸ் சிக்கிக் கொண்டு முழிக்கின்றது. நாம் இங்கு எதிர்ப்பதை அவர்கள் அங்கு பிரச்சனை செய்ய முற்பட்டால் நம் எதிர்ப்பு சரிதானே என்ற படி பல வல்லுனர்கள் பதில் அளித்து வருகின்றனர்.