கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தினர் எம் பி சி பிரிவுக்குள் இருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் இரு மதத்தை தழுவிய காரணத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த 2021 தேர்தலின் போது, நடப்பாச்சி இதை நாங்கள் சரி செய்கின்றோம் என்று உறுதி அளித்துள்ளது. ஆனால் தற்சமயம் ஆட்சி முடியும் தருவாயில் கூட அந்த வாக்குறுதி திமுக அரசினால் நிறைவேற்றப்படவில்லை.
இதனை அடுத்து சமீபத்தில் அவர்கள் கூடிய கூட்டத்தில், திமுக அரசு இனியும் வாக்குறுதி குறித்து எண்ணாமல் இருந்தால் அடுத்த தேர்தல் களத்தில் யாருக்கு நாங்கள் ஓட்டு அழிப்பது என்று ஆயர் குழு கூடி முடிவு செய்யும் என்று அந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினரான பிஷப் தாமஸ் பாலுசாமி வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் திமுக அரசு கதி கலங்கியுள்ளது.
அதே மாநாட்டில் தொடர்ந்து பேசிய கத்தோலிக்க பாதிரியார், திமுக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் அடுத்த தேர்தலில் கிறிஸ்தவர்கள் இணைந்து விஜய்க்கு வாக்களிப்போம் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தற்சமயம் திமுக அரசு மாவட்ட கலெக்டரிடம் அப்பிரச்சினையை விரைவில் முடிக்குமாறு ஆர்டர் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் யூடியூப் மூலம் தீயாக பரவிய இந்த செய்தியை திமுக அரசு முறியடிக்க விஜய்க்கு வாக்களிக்காதீர்கள். அவருக்கு வாக்களித்தால் மறைமுகமாக பாஜக அதிமுக கூட்டணிக்கு தான் வாக்களித்ததற்கு சமம் என்ற செய்தியை பரவ செய்ய வைத்துள்ளது.





