அகழ்வாராட்சியில் அதிமுக ஆண்டிற்கு செலவழித்ததில் காலில் ஒரு பங்கு கூட திமுக அதன் மொத்த ஆட்சியில் செலவழிக்கவில்லை என்று அடுக்கடுக்காக குற்றங்களை சுட்டிக்காட்டி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன். அவர் கூறிய பதிவு பின்வருமாறு, ஆழ்வாராய்ச்சி செய்வதற்காக பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி ஆண்டுக்கு 105 கோடி ரூபாய் ஒதுக்கிட்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு இருந்தது. தமிழகத்தில் மொத்தமாக 39 அகழ்வராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 33 அகழ்வாராய்ச்சிகள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சியை நடத்தக் கோரியது அதிமுக அரசு. அதை கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி நிராகரித்திருந்தார்.
மீண்டும் பழனிச்சாமி ஆட்சியில் அது நடத்தப்பட்டு அது சம்பந்தப்பட்ட பொருட்கள் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் கண்காட்சி மூலம் பார்வையிடப்பட்டது. அதற்கு அப்போது கீழடி என் தாய்மடி என்று பெயரிட்டது நான்தான். இது குறித்து மத்திய அரசு கேள்வி கேட்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஏனென்றால் அகழ்வாராய்ச்சியில் சிந்துவெளி நதிக்கரை நாகரிகமும், வைகை நதி நதிக்கரை நாகரிகமும் ஒன்றாக உள்ளது என்று எங்கள் ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரியர் திராவிடர் தத்துவத்தை கொண்டு வந்து பிரிவினைவாதத்தை முன்வைக்கின்றது திமுக. 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவை 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். இது கிட்டத்தட்ட கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிமு ஐந்தாம் நூற்றாண்டு வரை உள்ள ஆயிரம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டைச் சார்ந்த பொக்கிஷம் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே சிந்துவெளி நாகரீகம் தான் பழமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு இணையான சான்று எழுத்துக்கள் கீழடி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக செய்த ஆராய்ச்சி முடிவிற்கு திமுக பெயர் சூட்டிக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.