திமுகவின் அடுத்த பொது கூட்டம் மதுரையில்!! உற்சாகத்தில் தொண்டர்கள் !! 

DMK's next public meeting in Madurai!!
மதுரை: மதுரையில் நாளை ( ஜூன் 1)முதல்வர் ஸ்டாலின்  தலைமையில்  திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது .அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (மே 31) நண்பகல் 1.05 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினை  வரவேற்க அமைச்சர் தியாகராஜன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், மூர்த்தி போன்றவர்கள் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
மேலும்  கலெக்டர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் சித்ரா அவர்களும் நேரில் சென்று வரவேர்த்தனர். அமைச்சர்கள் பலரும் மற்றும் டி.ஆர்.பாலு மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். அதை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில்  அவனியாபுரத்தில்  நடக்கும் ரோடு ஷோ என்ற  நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி  வில்லாபுரத்தில் தொடங்கி சோலையழகுபுரம், பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர் டி.டி.ரோடு, அரசரடி சிக்னல், கரிமேடு வரை நடக்கிறது.அதன் பிறகு  நிகழ்ச்சி முடிவில் மதுர கோட்ஸ் அருகே முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலையை  திறக்கிறார் முதல்வர்.
முதல்வரை வரவேற்க மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு  உறுப்பினர் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ரோடு ஷோ சட்டசபை தேர்தலில்  பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.  திமுகவின் இந்த பொதுக்கூட்டத்திற்கு தீவிரமான  ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. திமுகவினர் கட்சி கொடிகளை ஏந்தியவாறு முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram