திமுகவின் முப்பெரும் விழா!! பழைய புதிய எதிரிகளுக்கு எச்சரிக்கை!! 

DMK's triple festival

 சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவை எவ்வாறு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 75 ஆண்டுகால வரலாற்றை கொண்ட, “திமுக கட்சியை பழைய மற்றும் புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” என கூறியுள்ளார். திமுக தலைவர் ஆக பொறுப்பு ஏற்றுவது முதல் முப்பெரும் விழாவை ஆண்டுதோறும் சென்னைக்கு வெளியே ஒரு மாவட்டத்தில் நடத்தி வருவது குறித்து கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் கரூர் மாநகரில் அமைந்துள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மேற்கொண்டு வருகிறது. மூத்த அமைச்சர் துரைமுருகன் தலைமை வழங்குவார் என கூறப்படுகிறது மேலும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
 வரும் செப்டம்பர் 17 தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை ஒட்டி முக்கிய உறுதி மொழிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்று உறுதி மொழியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நியாயமற்ற தொகுதி மறுவரை எதிராக போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் நலனை பேணி காக்க வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் உறுதிமொழி எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram