உடல் பருமன் தொல்லையா!!  எடையை குறைக்க வேண்டுமா இதை பண்ணுங்க!!

Do this if you want to lose weight.

உடல் எடை அதிகரிக்க காரணம் குறைந்த நாட்கள் அல்லது வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க எடையை விட அதிகளவு எடை அதிகரிப்பது ஆகும். மோசமான ஊட்டச்சத்து மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாம ஆகியவை திடீர் எடை அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்கள் ஆகும். மேலும் ஹார்மோன் மாற்றங்கள் , மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் அடிப்படை மருத்துவ நிலைமைகள் கூட உடல் எடையை பாதிக்க செய்யும்.

முக்கிய காரணமாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஹார்மோன் அளவை சீர்குலைத்து பின் உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். சிலருக்கு வளர்ச்சிதை மாற்றத்தில் வயது தொடர்பான மாற்றங்களும் திடீர் எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கக்கூடும் அதிகப்படியாக உப்பு உட்கொள்வது நீர்த்தேக்கம் மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தி திடீரென உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் துரித உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும் எனவே உணவு லேபுல்களை படித்து பின் குறைந்த அளவு உப்பு உள்ள உணவு பண்டங்களை தேர்ந்தெடுப்பதே முக்கியமாகும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் சோடியம் குளோரைடு இருக்கும் உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதாலும் திடீரென உடல் எடை அதிகரிக்கும்.

தடுக்கும் முறைகள்:
சரியான உணவு முறைகள் மற்றும் வயதிற்கு ஏற்ப உடற்பயிற்சிகள் செய்வதாலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
உடல் எடை குறைய நாட்டு மருத்துவத்தில் எவ்வளவோ  வழிகள் உள்ளன.
இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்

1. இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து கலக்கி அதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலனை தரும்.

2. கொள்ளை வேகவைத்து அதன் நீரை வடிகட்டி தினமும் குடிக்க உடல் எடை குறைவதை காணலாம்.

3. வாழைத்தண்டு சாறு அருகம்புல் சாறு பூசணி சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிக்க  வேண்டும்.

4. பப்பாளி முள்ளங்கி வாழைத்தண்டு வெள்ளரி முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. எலுமிச்சை சாற்றில் தேவையான அளவு தேன் கலந்து கலக்கி காலை மாலை இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

6. பாலிஷ் செய்யாத உணவுகள் மற்றும் தோல் நீக்காத வயிறு வகைகளை அதிக அளவில் உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது.

7. வெண்ணெய் நீக்கிய மோர் இளநீர் சர்க்கரை சேர்க்காத பழரசங்கள் பருகலாம்.

8. தினமும் ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

9. முளைகட்டிய ராகியை கஞ்சி செய்து குடிக்கவும்.

உடல் எடையை குறைக்க  நினைப்பவர்கள் மேற்கண்ட அனைத்து இயற்கை முறைகளிலேயே எடையை குறைக்கலாம். முடிந்த அளவில் தின்பண்டங்களை குறைத்தல் மற்றும் உணவு உண்ட பின் சிறிது நடைப்பயிற்சி ஆகியவற்றின் மூலமாகவும் உடல் எடையை இயற்கையாக குறைக்கலாம்.

குறிப்பு :
(இது நமக்கு கிடைத்த தகவல் மட்டுமே. இதனை சிறந்த மருத்துவரிடம் ஆலோசித்து பின்பு நீங்கள் நடைமுறைப்படுத்தவும் )

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram