தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பல்வேறு ஸ்பேம் கால்கள் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடிய கால்களாக மாறி இருக்கிறது. மேலும் இவற்றில் ஒரு சில கால்கள் மோசடி கால்களாகவும் அமைவதால் மக்கள் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். உங்களுடைய செல்போன் அழைப்பிற்கு வரக்கூடிய பேன் கால்களை முழுவதுமாக தவிர்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
முதலில் பெயர் தெரியாத பொதுவான அழைப்புகளை நிறுத்துவதற்கான வழிமுறைகள் :-
✓ உங்களுடைய செல்போனில் உள்ள அலைபேசி வரிசையை திறக்கவும்
✓ அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை தொட்டு அதன் நூல் இருக்கக்கூடிய அழைப்பாளர் ஐடி & ஸ்பேம் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்
✓ இந்த வசதியானது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு தெரியாதவர்களிடமிருந்து வரக்கூடிய கால்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகளை முழுவதுமாக நிறுத்துவதற்கு உதவியாக அமையும்.
குறிப்பிட்ட அழைப்புகளை மட்டும் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய சிம் கார்டு பொருத்து சேவைகள் மாறுபடுகிறது :-
✓ Airtel : airtel.in/airtel-dnd என்ற வலைதளத்திற்குள் சென்று உங்களுடைய மொபைல் எண்ணை கொடுப்பதன் மூலம் வருகிற ஒடிபிஐ என்டர் செய்து தேவையற்ற கால்களை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பக்கூடிய கால்கள் மட்டுமே உங்களுக்கு வரும் வகையில் மாற்றப்படும்.
✓ Jio : ஜியோ சிம் பயன்படுத்தக்கூடியவர்கள் மை ஜியோ ஆப் ஐ வைத்திருக்கும் பட்சத்தில் myjio ஆப்பினுள் சென்று அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புக்குள் சென்று அழைப்புகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
✓ VI : discover.vodafone.in/dnd என்று இணையதளத்திற்கு சென்று ஏர்டெல் போலவே இதற்கும் உங்களுக்கு தேவையான மற்றும் தேவையற்ற கால்களை செலக்ட் செய்து பிளாக் செய்வதன் மூலம் தேவையற்ற கால்கள் உங்களது மொபைலுக்கு வருவது தடுக்கப்படும்.
✓ BSNL : உங்களுடைய பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து 1909 என்ற எண்ணுக்கு start DND என் அனுபவதன் மூலம் தேவையற்ற கால்களை தேர்வு செய்து தடுத்துக் கொள்ள முடியும்.