மலக்குடலில் ஏற்படக்கூடிய எரிச்சலானது ஒரு சாதாரண ஆனால் தவிப்பூட்டக்கூடிய நிலையாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் மலச்சிக்கல், மன அவசர உணர்வு, மூலவியல், இன்ஃபெக்சன், உணவு பழக்க வழக்கம் மற்றும் ஹைஜீன் பிரச்சனைகளாகவும் இருக்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவு பழக்கங்கள் :-
✓ அதிக நார்ச்சத்து இருக்கக்கூடிய உணவுகள் : முளைகட்டிய பயிறு, தானியங்கள், காய்கறிகள் , பழங்கள் சாப்பிட வேண்டும்
✓ அதிக காரமான உணவுகள், டீ , காபி, சாக்லேட் போன்ற உணவுகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
✓ அதிக அளவு தண்ணீர் குடித்தல் மிகவும் முக்கியமான ஒன்று.
மலச்சிக்கலை தவிர்க்க செய்ய வேண்டியவை :-
✓ தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிப்பதை பழக்கப்படுத்த வேண்டும்.
✓ கொடிவேலி கிழங்கு இஷப்குல் போன்றவைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை ரத்தம் மலத்தில் காணப்படுதல், தொடர் வலி, மலம் கழிக்க கூடிய இடத்தில் வீக்கம், கஷ்டமான மலச்சிக்கல் நீண்ட நாட்களாக இருத்தல் போன்றவை உள்ளது என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
பெரும்பாலும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது மலச்சிக்கலை தூய்மையாக்கவும் வாழைப்பழங்களை காலை நேரத்தில் உண்பது மற்றும் சுடுநீர் அருந்துவது காலை நேரத்தில் வயிறை முழுவதுமாக சுத்தம் செய்ய உதவும்.