சூப்பர் வாசுகி ரயில் பற்றி தெரியுமா? பெட்டிகளை எண்ணுவதற்கு ஒரு மணி நேரம் ஆகுமாம்!! 

Do you know about Super Vasuki Train?
இந்தியாவில் மிக நீளமான ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் மற்றும் ஆறு எஞ்சின்கள் கொண்டு செயல்பட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின்  மொத்த நீளமானது சுமார் 3.5 கிலோ மீட்டர். தொலைதூர பயணம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரயில் பயணம்தான். ரயில் பயணத்தில் கட்டணம் குறைவு குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடலாம் என்ற பயணிகளின் எண்ணம் இன்று வரை பரவியுள்ளது. உலகின் மிக பெரிய நெட்வொர்க் ரயில்வேகளின் இந்திய ரயில்வேயின் ஒன்று.
பல லட்சக்கணக்கான கிலோமீட்டர் கொண்ட வழித்தடங்கள் மற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ள இந்தியாவில் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரயில்களில் சரக்கு ரயில்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்தியாவின் மிக நீளமான ரயில் “வாசுகி” என்ற சரக்கு ரயில் பெற்றுள்ளது. இதில் 295 பெட்டிகள் கொண்டது. இதன் மொத்த நீளம் 3.5 கிலோமீட்டர். நிலக்கரியை எடுத்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலில் 6 இன்ஜின்கள் கொண்டு செயல்படுகிறது.
வாசுகி ஒரு பயணத்தின் போது 27 ஆயிரம் டன் நிலக்கரியை எடுத்துச் செல்லக் கூடிய திறன் கொண்டது. அதாவது அனல் மின் நிலையத்தின் ஒரு நாளைக்கு தேவையான 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும். சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள ராஜ்நந்த்கான் வரை வாசுகி ரயில் இயக்கப்படுகிறது.
மொத்த பயண தூரம் 267 கிலோமீட்டர். பயண நேரம் 11 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள். மிக நீளமான இந்த ரயில் ஆனது ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கு சுமார் 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. “சூப்பர் வாசுகி ரயில்” என்ற ரயில் தான் இந்தியாவின் மிக நீளமான ரயில் ஆகும்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram