அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியக் கூடிய ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப் பணமாக இப்படித்தான் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிடித்தம் செய்யப்படும் இந்த பி எப் தொகையானது ஊழியர்களின் உடைய தேவை ஏற்பட்டால் எடுத்துக் கொள்ளும் வகையிலும் அவர்களுடைய ஓய்வூதிய காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையிலும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் உங்களுடைய பிஎஃப் கணக்குகளில் எவ்வளவு பணம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் கணக்கில் இடப்படுகிறது மற்றும் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு வரவு வைக்கப்படுகிறது என்பதை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.
எளிமையான முறையில் பிஎப் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய விவரங்களை அறிய பின்வருமாறு வழிமுறைகளை பின்பற்றவும் :-
✓ பிஎஃப் கணக்கோடு இணைக்கப்பட்டிருக்கக் கூடிய உங்களின் மொபைல் எண்ணிலிருந்து 773829899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்களுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் மூலமாக பிஎஃப் கணக்கு விவரங்கள் செல்போனுக்கு வந்து சேர்ந்துவிடும்.
✓ இங்கு ENG என இருக்கக்கூடிய எழுத்துக்கள் ஆங்கிலத்தை குறிக்கிறது. தமிழில் விவரங்களை பெறுவதற்கு TAM என இறுதியாக டைப் செய்து அனுப்புவதன் மூலம் PF வங்கி கணக்கின் தகவல்களை தமிழில் பெற்றுக் கொள்ள முடியும்.